21:28
0

பிரபல மொபைல் நிறுவனமான HTC தனது புதிய தயாரிப்பான HTC U என்னும் மொபைலை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது.

உலகில் அளவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள Squeezable Phone இதுவாகும்.

ஆண்ட்ராய்ட் 7.1 Nougat இயங்குதளத்தினை உடைய இந்த மொபைல் போனானது fingerprint scanner போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டது.

இதில் Edge sensor-ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக விரைவாக ஆப்-ஐ open செய்யவும், மொபைலினை எளிதாக கையாளவும் உதவுகிறது.

5.5 இன்ச் அளவிலான QHD (1440x2560 pixels) திரையினை கொண்டுள்ளது. இதன் மீது Gorilla Glass 5 ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது.

Qualcomm Snapdragon 835 SoC processor உடன் 4 GB or 6 GB RAM ஆனது இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 64GB or 128GB அளவிலான மொபைல் மெமரியினையும் 3000mAh அளவிலான மொபைல் பேட்டரியினையும் கொண்டது.

12-megapixel அளவிலான பின்புற கமெராவினையும் 16-megapixel அளவிலான முன்புற கமெராவினையும் கொண்ட இந்த மொபைல் செல்பி எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்றதாகும்.

இந்த மொபைலானது அடுத்த மாதம்(16.5.2017) 16-திகதி லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் வெளியிடப்படவுள்ளது.

0 comments:

Post a Comment