சந்திரனின் கிராமம் அமைக்கும் திட்டத்தில் சீனாவும் ஈடுபட்டால் சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கருதுகின்றது.
ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் மொத்தம் 22 நாடுகள் உறுப்பினராக உள்ளது.
இந்த விண்வெளிக்கழகமானது சந்திரனில் கிராமம் அமைத்து சுற்றுலாவினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக 2018ம் ஆண்டு சந்திரனில் இருண்ட பகுதியில் விண்கலத்தினை இறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த ஆராய்ச்சி கழகம் 2020ம் ஆண்டு ரோபோ மூலமாக கிராமத்தினை உருவாக்கி பின் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த முயற்சியில் சீனாவும் பங்கு கொண்டால் சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பானது ஏற்படும். இதற்காக சீனாவுடன் ஐரோப்பிய சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் தீவிர பேச்சு வார்த்தையினை நடத்தி வருகிறது.
இது குறித்து சீனாவின் பெகிஸ் பல்கலைக்கழக பூமி மற்றும் விண்வெளி அறிவியல் பள்ளியின் தலைவர் பேராசிரியர் ஜியாயோ வெய்லின், எதிர்காலத்தில் சந்திரனில் சர்வதேச நகரம் உருவாகும். அது ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment