20:56
0

போர்க்களத்தில் போர் செய்யும் பீரங்கிகள் ஏன் எதிரிகளை நேருக்கு நேர் நோக்கியபடி இல்லாமல், வானத்தைப் பார்த்து மேல் நோக்கி வைக்கப்பட்டிருப்பது ஏன்? நீங்கள் யோசித்தது உண்டா?

பீரங்கிகள் வானத்தை நோக்கி சாய்வாக வைக்கப்பட்டிருப்பது ஏன்?

பீரங்கிக் குண்டுகளை மேல் நோக்கிச் சுடும் போது அவை அதிக உயரத்துக்குச் செல்கின்றது. மேலே செல்லச் செல்ல வளிமண்டல அழுத்தம் குறைகிறது. வளிமண்டல அழுத்தம் குறையும் போது, பீரங்கிக் குண்டுகளின் வேகத்தைப் பாதிக்கும் காற்றின் எதிர்ப்புச் சக்தியும் குறைகிறது.

எனவே, இதனால் பீரங்கிக் குண்டுகள் நீண்ட வளைகோட்டில் பயணம் செய்து, தூரத்தில் இருக்கும் இலக்கைத் தாக்குகின்றது.

பூமியின் மேல் பகுதியில் டிராபோஸ்பியர் என்ற அடுக்கு உள்ளது. இது துருவப் பகுதியில் 8 கி.மீ. உயரம் வரையிலும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ. உயரம் வரையிலும் பரவியிருக்கும்.

இதற்கு மேல் உள்ள அடுக்கு ஸ்ட்ராடோஸ்பியர். இது பூமியின் மேற்பரப்பில் 80 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது.

டிராபோஸ்பியர் அடுக்கில் சுடப்படும் பீரங்கிக் குண்டு அதன் இலக்கை அடைய இரண்டு நிமிடம் எடுத்துக் கொண்டால் அதே குண்டு டிராபோஸ்பியருக்கு மேல் அடுக்கான ஸ்ட்ராடோஸ்பியரில் ஒரு நிமிட நேரமே எடுத்துக் கொள்கிறது.

ஏனெனில், ஸ்ட்ராடோஸ்பியரின் வளிமண்டல அழுத்தம் டிராபோஸ்பியரை விடக் குறைவாகவே இருக்கிறது.

எனவே பீரங்கிக் குண்டுகளைக் காற்று தடுத்து, அதன் வேகத்தைக் குறைத்து விடுகிறது என்பதால், பீரங்கியை மேல் நோக்கி வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment