06:32
0

Huawei நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு நொவெம்பர் மாதம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Mate 9 இனை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்ட தற்போது நான்கு மாதங்கள் கடந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை காலமும் எவ்வளவு கைப்பேசி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த சீன நிறுவனம் நான்கு மாத காலப் பகுதியில் சுமார் 5 மில்லியன் எண்ணிக்கையான Huawei Mate 9 கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளது.

இந்த அமோக விற்பனைக்கு அக் கைப்பேசி கொண்டுள்ள சிறப்பம்சங்களே காரணம் ஆகும்.

அதாவது 5.8 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Kirin 960 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 20, 12மெகாபிக்சல்களை உடைய பிரதான டுவல் கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 4,000 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இக் கைப்பேசியானது கூகுளின் Android 7.0 Nougat இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment