05:46
0

5 நிமிடத்தில் 100 சதவிகிதம் சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பும் வேகமாக வளர்ந்து வருகிறது.

1 மணி நேரம் மற்றும் 30 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள நிலையில் தற்போது 5 நிமிடத்தில் 100 சதவிகிதம் சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வசதியான 2015-ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், தற்போது தான் இது தொடர்பான தகவல்கள் உறுதியாக வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த StoreDot என்ற கைப்பேசி நிறுவனம் தான் இந்த புரட்சிகரமான வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவில் அறிமுக நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Doron Myersdorf என்பவர் பேசுகையில், ஸ்மார்ட்போன் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்த உள்ள இக்கைப்பேசிகள் 2018-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களை சென்றடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனினும், இக்கைப்பேசிகளை எந்த நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன என்ற தகவல்களை வெளியிடவில்லை.

மேலும், 5 நிமிடத்தில் 100 சதவிகிதம் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் விரைவில் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது என தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment