குவாண்டம் எனப்படுவது மிகவும் சிறிய பதார்த்தம் அல்லது துணிக்கையை குறிக்கும் சொல்லாகும்.
அதாவது நனோ தொழில்நுட்பத்தினை விடவும் மிகவும் சிறிய தொழில்நுட்பமே இதுவாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புக்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒளியின் வேகத்தில் மின்னைக் கடத்தக்கூடிய குவாண்டம் துணிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள ஹைப்பர் ஸ்பீட் கணனிகளில் (Hyper-speed) சிலிக்கான் கடத்திகளுக்கு பதிலாக இவற்றினை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது கோட்பாட்டு திட்டத்தில் காணப்படுவதும், எதிர்வரும் 100 வருடங்களுக்குள் சாத்தியப்படக்கூடியதுமான குவாண்டம் கம்பியூட்டர்கள் தொடர்பிலும் இக் குழு ஆய்வு செய்து வருகின்றது.
இந்த ஆய்விற்கு Jing Xia என்பவர் தலைமை தாங்குகின்றார்.
மேலும் இவர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் பல பல்கலைக்கழகங்களின் ஊடாக தமது ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment