23:26
0

உலகிலேயே முதன் முறையாக மென்மையான இழையத்தினைக்கொண்டு செயற்கை முறையில் விழித்திரையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதற்காக நீரினை அடிப்படையாகக் கொண்ட ஹைட்ரோ ஜெல் மற்றும் ஒளியை உணரக்கூடிய புரதம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முதல் உலோக தன்மையிலான விழித்திரை மாற்றீடு நடைமுறையில் இருந்தது. எனினும் மனிதக் கண்ணானது ஏனைய பாகங்களை விடவும் நம்பமுடியாத அளவிற்கு உணர்திறன் வாய்ந்தது.

இதன் காரணமாக இலகுவாக சேதமடைதல், வீக்கத்திற்கு உள்ளாகுதல் அல்லது வடுக்கள் ஏற்படுதல் என்பன நிகழும்.

எனவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விழித்திரையானது மேற்கண்ட பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பினை தரவல்லது என ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரசாயனவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment