இலத்திரனியல் சாதனங்களின் உருவாக்கத்தில் ட்ரான்ஸ்சிஸ்டர்களின் பங்கானது அளப்பரியதாகும்.
இவற்றின் பருமனானது காலத்திற்கு காலம் சிறிதாக்கப்பட்டு இலத்திரனியல் சாதனங்களின் பருமனும் சிறிதாக்கப்படுகின்றமை தெரிந்ததே.
இது ஒரு புறம் இருக்க தற்போது புதிய வகை ட்ரான்ஸ்சிஸ்டர் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இப் புதிய ட்ரான்ஸ்சிஸ்டரானது இலக்ரோன்களை போட்டோன்களாக மாற்றும் வல்லமை உடையது.
அதாவது மின்னோட்டம் நிகழ்வதற்கு இலக்ரோன்கள் எனப்படும் இலத்திரன்களின் ஓட்டம் அவசியமாகும். அதே போன்றே போட்டோன்களும் மின்னை கடத்த வல்லது.
ஆனால் இலக்ரோன்களின் வேகத்தினை விடவும் போட்டோன்களின் வேகம் பன்மடங்கு அதிகமாகும்.
எனவே புதிய ட்ரான்ஸ்சிஸ்டர் மூலம் 100 மடங்கு வேகத்தில் செயற்பட முடியும். இதனை தரவுகளைக் கடத்துவதற்கும் பயன்படுத்த முடியும்.
அமெரிக்காவிலுள்ள Illinois பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment