அண்டவெளி தொடர்பில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவ்வப்போது புதிய பொருட்களை கண்டுபிடிப்பது வழக்கமாகும்.
இவர்களின் அண்மைய கண்டுபிடிப்பாக அண்டவெளியில் தோன்றிய மர்ம ஒலி காணப்படுகின்றது.
இதனை கொஸ்மிக் ரேடியோ சிக்னல் என அவர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
எனினும் இது எவ்வாறு ஏற்படுகின்றது என்பது ஆரம்பித்து ஏனைய தகவல்களை விபரிப்பதற்கு விஞ்ஞானிகள் தடுமாறிவருகின்றனர்.
22 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு ஒன்றே இவ்வாறு சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “கொஸ்மிக் ரேடியோ சிக்னல் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்” என குறப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ் ஆராய்ச்சிக்கு தாம் நீண்ட நேரத்தையும், அதிகளவு தொலைகாட்டிகளையும் பயன்படுத்துவதாக Netherlands Institute for Radio Astronomy எனும் நிறுவனத்தில் பணியாற்றும் Ryan F. Mandelbaum என்பவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment