03:54
0

சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தின் அருகில் நிலா இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிதாக நிலா கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பை நாசா விஞ்ஞானி மார்டோன் அறிவித்துள்ளார். இந்த நிலா ஏறத்தாழ 400 கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

சூரிய மணடலத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அருகே உள்ள குயிர்பெர் திணைமண்டலத்தில் பெரியிடப்படாத கிரகம் ஒன்று உள்ளது.

விஞ்ஞானிகளால் ‘2007 OR10' என்று அழைக்கப்படும் இந்த கிரகம் 1,500 கீலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, சூரிய குடும்பத்தின் 3வது பெரிய சிறிய கிரகமாகும்.

இந்த சின்ன கிரகத்தில் நிலா ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டிபிடித்துள்ளனர்

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் இந்த நிலாவைக் கண்டுபிடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே ஹப்பிள் தொலைநோக்கியைக் கொண்டுதான் ப்ளுட்டோ சின்ன கிரகத்தின் 5வது நிலவை கண்டுபிடித்தனர்.

கடந்த 2009ம் ஆண்டில் ஹப்பிள் தொலைநோக்கி உதவியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இந்த நிலாவை முதன்முறையாக அடையாளம் கண்டுள்ளனர். பின்பு 2010 ஆண்டு எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தில் அந்த நிலவானது சின்னகிரத்தை சுற்றிவருவதை மற்றொரு புகைப்படத்தின் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment