இதயத்தில் ஏற்படும் சில வகையான நோய்த்தாக்கங்களினால் மாற்றீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேகமாக செயற்கை இதயங்களே பொருத்தப்படும்.
இவற்றிற்கு மின்கலம் ஒன்றின் உதவியுன் சக்தி வழங்கப்பட்டு குருதிச் சுற்றோட்டம் ஏற்படுத்தப்படும்.
எனினும் உடலினுள் பொருத்தப்படும் குறித்த மின்கலங்களை பராமரிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு வயர்லெஸ் முறையில் செயற்படக்கூடிய மின்கலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்கலத்தினைப் பயன்படுத்துவதால் உடலில் தொற்றுக்கள் ஏற்படுவதையும் குறைக்க முடியும் என நம்புகின்றனர்.
மேலும் இக் கண்டுபிடிப்பினால் உடனடியாக சுமார் 100,000 பேர் வரையானவர்கள் பயன்பெறவுள்ளதாக US National Institute of Health நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment