குழந்தைகளின் அறிவுத்திறனுக்கு காரணம் தாயின் மரபணுவா அல்லது தந்தையின் மரபணுவா என்ற கேள்விக்கான பதிலை மரபியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தாயுடன் உணர்வுப்பூர்வமான பந்தம் கொண்டுள்ள குழந்தைகளின் மூளைப்பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
7 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், தாயுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தில் உள்ள குழந்தைகளின் அறிவுத்திறன் 10% வரை அதிகரித்தது தெரியவந்துள்ளது.
X-குரோமோசோம்களில் உள்ள அறிவுத்திறனுக்கு காரணமான ஜீன்களே குழந்தைகளின் அறிவுத்திறனுக்கு காரணமாக அமைவதாகவும்,
Y-குரோமோசோம்களில் காணப்படும் அறிவுத்திறனுக்கான ஜீன்கள் செயலிழந்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு காரணமாக அமைவதையும், தந்தையின் புத்திசாலித்தனத்திற்கான ஜீன்கள் குழந்தையின் அறிவுத்திறனுக்கு பங்களிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.
சுருக்கமாக சொல்வதென்றால் நமது அறிவுத்திறனுக்கு காரணம் அம்மாதானே ஒழிய அப்பா அல்ல.
“தாயை போன்ற அழகு, தந்தையை போன்ற அறிவு” என்பது பொதுவாக வழக்கிலுள்ள சொல்லாடல்.
ஆனால், மரபியல் ஆய்வுகள் இதற்கு நேர்மாறான முடிவை தந்துள்ளன என்பதுதான் ஆச்சர்யமான விடயம்.
0 comments:
Post a Comment