அண்டவெளியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பல்லாயிரக்கணக்கான கோள்களும், நட்சத்திரங்களும் காணப்படுகின்றமை தெரிந்ததே.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய கோள்கள் தொடர்பிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது நூற்றுக்கணக்கான புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவற்றுள் 10 வரையான கிரகங்கள் பூமியைப் போன்ற தோற்றத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை வெளியிட்ட அறிவிப்பிலேயே இந்த தகவலை நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 219 வான்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றிலேயே 10 கிரங்கள் பூமியைப் போன்று தோற்றமளிப்பதுடன், பூமியின் அளவினை ஒத்ததாகவும் இருக்கின்றன.
மேலும் இவை அனைத்தும் எமது சூரிய குடும்பத்திற்கு உரித்தானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment