21:22
0

உயிரினங்களின் பரம்பரை ரீதியான இயல்புகளை தீர்மானிப்பதில் DNA முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த DNA இல் காணப்படும் மூலக்கூறுகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும்போது பிரிதி செய்யப்படுவது வழக்கமாகும்.

இச் செயற்பாடு தொடர்பில் ஏற்கணவே விஞ்ஞான உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அது எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை தற்போது நேரடியாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Stephen Kowalczykowski என்பவரது தலைமையிலான குழு ஒன்றே மேற்கொண்டுள்ளது.


Guanine, Thymine, Cytosine, மற்றும் Adenine (G, T, C, A) எனப்படும் நான்கு வகையான மூலங்களைக் கொண்ட DNA ஆனது இரட்டை சுருள் வடிவத்தில் காணப்படும்.

இது பிரதி செய்யப்படும்போது Helicase எனப்படும் நொதியம் சுரக்கப்பட்டு இரட்டை சுருள் வடிவமானது தனித் தனி இழையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a comment