பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோள் மற்றும் 30 நனோ செயற்கைகோள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.29 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது. கவுண்டவுன் முடிவடைந்து தற்போது விண்ணில் ராக்கெட் பறந்துள்ளது.
மொத்தமுள்ள 30 செயற்கைகோள்களில் 29 செயற்கைகோள்கள் அமெரிக்கா உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் தயாரானவை. ஒன்று மட்டும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.
இதனையடுத்து 23 நிமிடங்கள் கழித்து 31 செயற்கைகோள்களுடன் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
30 நனோ கோள்கள் மற்றும் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோள் உடன் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.
பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.
அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment