18:46
0

ரோபோக்களை உருவாக்கும்போது பொதுவாக இலத்திரனியல் பகுதிகளும் இயந்திரவியல் பகுதிகளும் காணப்படும்.

ஆனாலும் முதன் முறையாக மோட்டார் உட்பட எந்தவொரு எந்திரவியல் பகுதிகளும் இன்றிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

தன்னைத்தானே தயார்ப்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும் இந்த ரோபோ முற்றுமுழுதாக இலத்திரனியல் பாகங்களையே உள்ளடக்கியுள்ளது.

DeployBot எனப்படும் இதனை கடல் படுக்கைகள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பு என்பவற்றில் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரோபோவை தென் கொரியாவின் Seoul National பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கடலின் அடிப்பகுதி மற்றும் விண்வெளியில் இயந்திரவியல் சாதனங்களை பயன்படுத்தும்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment