கலவியில்லா இனப்பெருக்கம் (Asexual Reproduction) என்பது தான் குளோனிங் முறையின் அடிப்படை விடயமாகும். உலகளவில் குளோனிங் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
செம்மறி ஆடு, பூனை, மான், நாய் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு மிருகங்களை விஞ்ஞானிகள் இதுவரை குளோனிங் முறையில் உருவாக்கியிருக்கிறார்கள்.
குளோனிங், ஜீன் குளோனிங் (Gene Cloning), இனப்பெருக்க குளோனிங் (Reproductive Cloning) மற்றும் சிகிச்சைமுறை குளோனிங் (Therapeutic Cloning) ஆகிய மூன்று வகைகளில் செய்யப்படுகிறது.
இனப்பெருக்கத்திற்காக குளோனிங் செய்யப்பட வேண்டிய மிருகத்திலிருந்து முதிர்ந்த சீமாடிக் உயிரணு (Matured Somatic Cell) மற்றும் DNA கூறுகள் நீக்கப்பட்ட முட்டை செல் (DNA removed Egg Cell) ஆகிய இரு செல்களை எடுப்பார்கள்.
இப்படி மிருகங்களை வைத்து செய்யப்படும் ஆராய்ச்சியை அடுத்து அறிவியலின் உச்சமாக மனிதர்களை குளோனிங் செய்வதும் எட்டிவிடும் தூரத்தில் தான் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
தற்போது சிகிச்சை முறை குளோனிங்கில், மரபணு நோய்கள், வயதானால் வரும் தீவிர பிரச்னைகள் போன்றவற்றை சரி செய்கிறார்கள்.
குளோனிங் குறித்த இதே முக்கியத்துவமான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தொடரும் பட்சத்தில், 2020ம் ஆண்டுக்குள் குளோனிங் மனிதன் என்பது சாத்தியம் என விஞ்ஞானிகள் அடித்து கூறுகிறார்கள்.
இது நடந்தால் குழந்தையின்மை போன்ற குறைகள் முழுவதுமாக இல்லாமல் போவதுடன் ஒரு குழந்தைக்கு ஒன்றிலிருந்து மூன்று பெற்றோர்கள் வரை இருக்கும் என்ற நிலை கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
0 comments:
Post a Comment