09:11
0
தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரால் மூடப்பட்ட பகுதிகள்  ஈரநிலங்கள் என பொதுவாக அழைக்கப்படுகின்றன. ஆயினும் ஈரநிலம் பற்றி பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன.


றம்சார் சமவாயம்:- நீர்ப்பகுதிகள் அல்லது சதுப்பு நிலம், தாழ்நிலப்பகுதி, பழுப்பு நிலக்கரிப் பகுதிகள் இவை இயற்கை அல்லது செயற்கையானதாக, நிரந்தரமான அல்லது நிரந்தரமற்றதாகவோ இருக்கலாம். இங்கு காணப்படும் நீர் நிலையானதாக அல்லது நகாச்சிக்குட்பட்டதாகவோ காணப்படும். நன்னீர், கலங்கல்நீர் அல்லது உவர்த்தன்மை கொண்ட நீர் காணப்படும். கரையோர நிர்ப்பகுதிகளைக் உள்ளடக்கியிருக்கும். வற்றுப்பெருக்கு குறைந்த காலங்களில் இதன் ஆழம் 6 மீற்றருக்கு மேற்படாது காணப்படும். ஈரநிலங்களையடுத்துள்ள ஆற்றுப்படுக்கை அல்லது கரையோர வலயங்கள், தீவுகள் அல்லது ஈரநிலங்களுக்குள்ளே 6 மீற்றருக்கு மேற்படாத கரையோர நீர்த்தொகுதிகளையும் உள்ளடக்கும்.

கனடா ஈரநில பதிவேடு:- ஈரநிலம் என்பது ஒரு நிலப்பரப்புத்தான இங்கு நீர் மட்டமானது நிலமட்டத்திற்கு மேல் அல்லது அதற்கு அருகாமையில் அல்லது கீழ் மட்டமாக நிரம்பலடையக் கூடியதாகவும் நிரம்பல் செயன்முறை மூலம் நீரியற்செயற்பாடுகளை மேற்கொள்ளும் அளவிற்கு தகுதி பெற்றிருப்பின் அதனை ஈரநிலம் எனலாம்.
•    ஈரநிலங்கள் உயிரினங்களின் பல்வகைமைத் தன்மையைக் கொண்டிருப்பதனால் 'நகரங்களின் பச்சை நுரையீரல்கள்' என அழைக்கப்படுகின்றன.
•    ஈரநிலங்களின் சர்வதேச முக்கியத்துவம் தொடர்பான சமவாயம் 1971 இல் ஈரானில் உள்ள ரம்சார்  (Ramsar) எனுமிடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
•    உலகில் இன்று 130 நாடுகள் ஈரநில சமவாயத்தில் பங்கேற்றுள்ளன.
•    உலகில் ஏறக்குறை 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டயர் நிலப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.
•    இலங்கை 1991 இல் சமவாயத்தில் ஒப்பந்ததாரியாக இருந்து முதன்முதலில் புந்தல ஏரியை ஈரநிலமாக பிரகடனம் செய்தது.


1)    இலங்கையில் காணப்படும் ஈரநிலங்களின் வகைப்பாடு:-

•    உள்நாட்டு நன்னீர் ஈரநிலங்கள்:- ஆறுகள், சேற்றுநிலங்கள், கண்டல் தாவர நிலங்கள், விள்ளுக்கள்.
•    உவர்நீர் ஈரநிலங்கள்:- ஆற்றுமுகம், கடனீரேரிகள், கடற்கரை, முருகைக்கற்பாறைகள்
•    மனிதனால் உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள்:- குளம், நீர்த்தேக்கம், உப்பளம்.


2)    இலங்கையில் காணப்படும் ஈரநிலங்கள்:-

•    முத்துராஜவல, புந்தல, றேகாவ, பொல்கொட, கொக்கல, முந்தல், கல்மெட்டியாவ, அத்திடிய, ஆனைவிழுந்தவா, மட்டக்களப்பு வாவி முதலிய பகுதிகளைக் குறிப்பிடலாம்.


3)    ஈரநிலங்களின் நன்மைகள்:-

•    வெள்ளப்பெருக்கை குறைப்பதற்கு உதவுகின்றது.
•    புயற்காலங்களில் ஏற்படும் கiயோர அரிப்பை தடுக்கின்றது.
•    நச்சுத்தன்மையை அகற்றி நீரினை சுத்தப்படுத்துகின்றது.
•    காபணைத் தேக்கி வைத்திருக்கும் ஒரு தாழியாகச் செயற்படுகின்றது.
•    மீனினங்களின் இனவிருத்திக்கு ஏற்ற இடங்களாக உள்ளது.
•    அடையல்களைத் தேக்கி வைக்கின்றது.
•    கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக விளங்குகின்றது.
•    அருகில் உள்ள கிணறுகளின் நிலையான நீர்மட்டத்தை பேணுவதற்க உதவுகின்றது.



4)    ஈரநிலங்களின் சீரளிவுக்கான காரணங்கள்:-

•    நிலமீட்பு நடவடிக்கைகள்:- நகரப்பிரதேசங்களில் அதிகரித்துவரும் சனத்தொகை மேலதிக நிலத்திற்கான தேவை போன்ற காரணங்களினால் ஈரநிலப்பகுதிகள் கட்டடக்கழிவுகள், மணல் போன்றவற்றால் நிரப்பப்பட்டு பணன்படுத்தப்படுவதுடன் நகரக்கழிவுகள், குப்பை கூழங்கள் முதலியன மூலம் நிரப்பப்படுவதனாலும் ஈரநிலங்கள் அருகிச் செல்கின்றன. அத்துடன் ஈரநிலங்களில் காணப்படும் உயிர்பல்வகைமையும் பாதிப்படைகின்றது.
•    தாவரப் போர்வை அழிக்கப்படுதல்:-  கண்டல் தாவரங்கள் தரைக்கீழ்நீரின் நிலைப்பிற்கு காரணமாக அமைவதுடன், உயிரினங்களின் வாழ்விடமாகவும் அமைகின்றது. இவ்வாறு பயன்பாடுடைய ஈரநிலங்களில் காணப்படும் கண்டல் இன தாவரங்கள் யுத்த நடவடிக்கைகளின்போது பாதுகாப்புக் காரணமாகவும், அருகிலுள்ள மக்களின் விறகுத் தேவைகளுக்காகவும் அழிக்கப்படுகின்றன. இதனால் அங்குள்ள உயிரினங்கள் அழிவடைவதுடன் அவற்றின் வாழிடங்களும் அழிவடையும்.
•    கழிவுகள் சேர்தல்:- நகரக்கழிவுகள், கைத்தொழில் கழிவுகள் மற்றும்  விவசாய இரசாயனக் கழிவுகள் ஈரநிலங்களில் சேர்வதனால் ஈரநிலப்பகுதியிலுள்ள நீர் மாசடைகின்றது. விவசாய இரசாயணக் களிவுகளில் இருந்து வெளியேறும் நைத்திரேற்று, பொசுபேற்று கழிவுகள் கூடியளவில் சேர்வதால் அல்காக்கள் வளர்வதற்கு காரணமாகின்றது. இதனால் அப்பிரதேசங்களில் வாழ்கின்ற நீhவாழ் உயிரினங்கள் சில இறக்க நேரிடுவதுடன் பெரும்பாலானவை வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தும் செல்கின்றன.
•    வண்டல் படிதல்:- நதிகளின் மூலம் கொண்டுவரப்படும் அடையல்கள் ஈரநிலப்பிரதேசங்களில் படியவிடப்படுவதனால் ஈரநிலப்பகுதியின் பரப்பளவு குறைவதுடன் நீரின் ஆழமும் குறைந்து செல்கின்றது. அத்துடன் குறிப்பிட்ட வண்டல் படிவுகளினால் உயிரின பல்வகைமை சீர்குலையும் அபாயமும் உள்ளது.
•    பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா செயற்பாடகளின் காரணமாக ஈரநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக குளங்கள், கடனீரேரிகள், நீர்வீழ்ச்சிகளின் சூழல் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது.
•    நீர்மின்சார வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஈரநிலங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் நீர்த்தேக்கங்கள் பாதிக்கப்படும். (விக்டோரியா, ரந்தெணிகல)
•    ஈரநிலங்களின் முக்கியத்தவம் பற்றிய விழிப்பணர்வு பற்றாக்குறையாகவிருத்தல்.
•    இயற்கை அழிவுகள் (வறட்சி).




5)    ஈரநிலப்பிரதேசங்களை பாதுகாப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்:-

•    தாவரப்போர்வையை பாதுகாத்தல்:- கண்டல் தாவரங்களின் முக்கியத்துவத்தை சகலருக்கம் உணர்த்துவதன் மூலம் அவற்றை அழிவிலிருந்து மீட்டுக்கொள்ளலாம். அத்துடன் அழிக்கப்பட்ட தாவரங்களுக்கு பதிலாகவும் மேலதிகமாகவும் க்டல்தாவரங்களை மீள்நடுகை மூலம் உருவாக்குதல்.
•    பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்தல்:-  ஈரநிலங்கள் அமைந்து காணப்படும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து அப்பிரதேசங்களில் ஈரநிலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோரை சட்டத்தின் முன்நிறுத்துவதன் மூலமும் ஈரநிலப்பகுதிகளைப் பாதுகாக்கலாம்.
•    நகரக்கழிவுகளை கொட்டுவதை தவிர்த்தல்:- ஈரநிலப்பிரதேசங்களில் நகரக்கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தொலைவான இடங்களில் அவற்றை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தோ அல்லது கூட்டுஉரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரநிலப்பகுதிகளில் திண்மக்கழிவுகள் சேர்வதனைக் குறைக்கலாம்.
•    கைத்தொழிற்சாலைகளை வேறுபகுதிகளில் அமைத்தல்:- ஈரநிலங்கள் உள்ள பகுதிகளில் அமைந்து காணப்படுகின்ற கைத்தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படுகின்ற கழிவுகள் ஈரநிலங்களில் சேர்வதனைக் கட்டுப்படுத்தவேண்டுமாயின், அக்கைத்தொழிற்சாலைகளை வேறுபகுதிகளில் அமைத்தல்.
•    ஈரநிலப்பகுதிகளில் நிலம்நிரப்பி குடியிருக்கும் தேவையை கருத்திற் கொண்டு அத்தகையவர்களுக்கு வேறு சமவெளிப்பிரதேசங்களில் வசிப்பிடவசதி அல்லது நிலத்திற்கான உரிமையைப் பெற்றுக்கொடுத்தல்.


6) இலங்கையின் தேசிய ஈரநிலக் கொள்கையில் காணப்படுகின்றவிடயங்கள்:-
•    ஈரநிலங்களின் சூழல்தொகுதிகளைப் பேணுவதும் பாதகாத்தலும்.
•    ஈரநிலங்களைச் சட்டரீதியற்ற முறையில் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
•    ஈரநிலங்களின் உணிரியல் பண்மைத்துவத்தையும், உற்பத்தித் திறனையும் அழியாமல் பாதுகாத்தல்.
•    ஈரநில வாழிடச் சூழலால் வழங்கப்படும் சூழற்தொகுதி சேவைகளை மேம்படுத்தல்.
•    உள்ளுர்  சமூகங்களினால் ஈரநிலங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மரபுரீதியான நடவடிக்கைகளையும், நிலைத்துநிற்கக் கூடிய பயன்பாட்டினையும் உறுதிசெய்தல்.
•    ஈரநிலங்கள் பற்றிய ரம்சார் சமவாயத்தின் ஒப்பந்ததாரி எனும்வகையில் தேசிய கடப்பாடுகளைப் பொறுப்புடன் செய்தல்.

0 comments:

Post a Comment