மேலும், தனிப்பட்ட உயிரணுவின் அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப் பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் பகுதிகள் உள்ளன.
அவை மரவியம், பட்டையம் என்று அழைக்கப்படுகிறது. மரவியம் தண்டின் நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி வெளிப்புறமாக ஆரவாட்டில் ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் தான் மரத்தின் தண்டு பகுதி உருளை வடிவில் காணப்படுகிறது.
0 comments:
Post a Comment