08:14
0
10 வருடகால சேவையை பூர்த்தி செய்த தேசியப் பாடசாலை ஆசிரியர்கள் எதிர்வரும் ஜனவரியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் .
இத்தகைய ஆசிரியர்களின் சேவை விபரங்களை அதிபர்கள் ஊடாக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைப் பிரிவு திரட்டி வருகின்றது .

தேசியப் பாடசாலைகளில் தொடர்ந்தும் ஒரே பாடசாலையில் 10 வருட சேவையைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் அடுத்த வருடம் ஜனவரியில் வேறு தேசிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் . 2013 ஆம் ஆண்டு ஜனவரியில் 20 வருட சேவையை பூர்த்தி செய்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் .

2014 இல் 10 வருட சேவையைப் பூர்த்தி செய்தவர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் . தேசியப் பாடசாலைகள் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயற்படுவதனால் மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் உள்ள வலயக் கல்விப் பணிமனைகள் தலையீடு செய்யவோ ஆசிரியர் ஆளணி தொடர்பான கல்விப்பிணை மேற்கொள்ளவோ முடியாத நிலையில் உள்ளது . இதனால் தேசிய பாடசாலை ஆணையில் மேலதிக ஆசிரியர் இருப்பதாகவும் நீண்டகாலம் ஒரே பாடசாலையில் கடமையாற்றியோர் தொகை அதிகமாக இருப்பதாகவும் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது .

தேசியப் பாடசாலை ஆசிரியர் ஆளணி இடமாற்றத்தை தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு அமைய மேற்கொள்வதற்கு வசதியாகவே நீண்டகாலம் ஒரே பாடசாலையில் கடமையாற்றியவர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் .

எதிர்காலத்தில் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு அமைய தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இடமாற்றமும் மேற்கொள்ளப்படவுள்ளது .

அதற்கு அமைய புதிய தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் தேசிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறவும் அதேபோன்று மாகாணப் பாடசாலை ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது .

0 comments:

Post a Comment