தலைமைத்துவம் என்றுமே கற்பதை அப்படியே செயல்படுத்தி கொண்டிருக்கும் ஓர் செயற்பாடல்ல அது ஊடாடு ஆற்றலை நிகழளவிற்கேற்ப படிமுறையாக்கற் செயற்பாடு ஊடாக அமுல்படுத்தும் தொழிற்பாடு.
ஓர் தலைவர் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் மாறுபட்ட வழிகளை அல்லது பொறிமுறைகளை கையாள்வது அவசியம். அவரது மனப்பாங்கு என்றும் ஒரே வழியில் செயற்பட்டு வெற்றியடைவது சாத்தியமற்றதாகையால் பிரச்சினைகளை பொறுத்து அவர் கொண்டிருக்க வேண்டிய மனநிலை மாற்றப்பட வேண்டியதவசியமாகும். இதை நாம் 06 வகை நிற தொப்பிகளை கொண்டு வகைப்படுத்த உள்ளோம். இந்த செயல்முறைமை டாக்டர். டீ புரோணோ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒவ்வொரு தொப்பியின் நிறத்திற்கேற்ப அதற்கே உரித்தான சிந்தனைகள் உண்டு. தலைவர் எந்த தொப்பியை (சிந்தனையை) எப்போது அணிய வேண்டும் ( சிந்திக்க வேண்டும்) என தொடர்ந்து பார்ப்போம். இக்கோட்பாடு எந்த நிற தொப்பியை தலைவர் அணிகின்றாரோ அவர் அந்நிற சிந்தனையை கொண்டு செயலாற்றுவார் எனும் எடுகோளிற்கமைய வரையப்பட்டது.
இதில் சிவப்பு,நீலம்,கறுப்பு,வெள்ளை,பச்சை மற்றும் மஞ்சள் நிற தொப்பிகள் தலைவரின் சிந்தனைக்கு உரியதாய் உள்ளன. இவ்வாறு தொப்பி முறைமையை சரிவர கையாளின் என்னவாக இருக்கின்றது என்பதை விட என்னவாக இருக்க வேண்டும் எனும் நேருருவாக்கு மனப்பான்மை உருவாக்கப்படுகின்றது. இப்பொறி முறையானது உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களான IBM மற்றும் Ericson நிறுவனங்களிலும் அமுலிலுள்ளது சிறப்பம்சமாகும்.
நீலநிறத்தொப்பி, இத்தொப்பியை தலைவர் அணிந்திருக்கும் போது அவர் ஓர் அனுசரணையாளர் தொழிற்பாட்டை எதிர்பார்க்கின்றார். எப்போது குறிப்பிட்ட தொழிற்பாட்டை முடிப்பது அல்லது எமது அடுத்த திட்டம் என்ன என்பது அவரது தொடர்வினாக்களாகும். இவர் எப்படினான சிந்தனைகளை சிந்திக்க வேண்டும் என சிந்திப்பதோடு அச்சிந்தனைகளை உருவாக்குவதற்கான வளங்களை உருவாக்குவதோடு செயற்பாட்டிற்கான திட்டமிடலையும் மேற்கொள்வார்.
வெள்ளைநிற தொப்பி அணியும் போது அவர் தன்னிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் முடிவிற்கு வருபவராகவும் அதே நேரம் அத்தகவல்களை பெறுவதிலும் அவற்றை சீரமைப்பதிலும் ஆர்வம் காட்டுபவராகவும் இருப்பார். இவர் எனக்கு என்ன தகவல்கள் தேவை ? அதை எப்படி பெற்றுக்கொள்ளலாம்? எனது இலக்கு மற்றும் தேவைப்பாடு என்ன என்பதை பற்றிய தேவைப்பாடு உடையவராகவும் இருப்பார்.
பச்சை தொப்பி என்றுமே மாற்றுபாயங்களை பற்றி சிந்திக்கின்ற ஓர் முறைமை. பிரச்சினைகட்கு எவ்வாறு மாற்று தீர்வுகளை காண்பது அதில் மிக இலாபகரமானதை தேர்வு செய்வது இவர் புத்தாக்க திறமை கொண்டவராகவும், மாற்றுபாயங்களை இனங்காண கூடியவராகவும் இறுதியாக அதை பொருத்தமான சாத்தியப்பாடுகளில் அமுல்படுத்த கூடியவராகவும் இருக்க வேண்டும்.
மஞ்சள் தொப்பி என்றுமே நேர் எண்ணங்களை மட்டும் கொண்டு செயற்படும் ஓர் முறைமை. தோல்வி ஏற்படினும் அதில் கிடைக்கின்ற அனுபவத்தை ஓர் முதலீடாக கருதுதல். அதை வைத்து அடுத்த காரியத்தல் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துபவர். சுருக்கமாக கூறின் எதிலும் நன்மையே நடக்கும் எதுவும் முதலீடே எனும் கோட்பாட்டை மஞ்சள் தொப்பி வெளிப்படுத்தும். ஆனாலும் இவர் தர்க்கரீதியான முடிவிலேயே தங்கியிருப்பது குறிப்பிடக்தக்கது.
கறுப்புத் தொப்பி முறைமை ஆனது மஞ்சட் தொப்பிக்கு நேர் எதிரான வெளிப்படுத்தலை அதாவது என்றும் செயற்பாட்டில் உள்ள ஆபத்து, பின்னடைவு மற்றும் கடினங்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுப்பவர். அதாவது ஓர் முயற்சியை ஆரம்பிக்கும் போது அதில் உள்ள அபாயம் அல்லது நட்டம் என்ன என்பதை முதலில் பார்த்து பின்பே செயலலில் இறங்குவார். இதுவும் தர்க்க ரீதியான தகவல்களின் அடிப்படையிலேயே அமையும்.
சிகப்புத் தொப்பி உணர்ச்சிகளின் வடிவம் எனலாம். இதில் எந்த வித தர்க்க ரீதியான தகவல்களோ அல்லது ஆராய்வுகளோ இன்றி உணர்ச்சி அடிப்படையில் தீர்மானங்களை எடுத்தல். ஆனாலும் தலைவர் தான் இப்போது கொண்டிருக்கும் உணர்ச்சிகள் நிரந்தரமானவை அன்று அவை மாற்றம் பெறக்கூடும் என உணர்ந்து செயற்பட வேண்டும். ஆயினும் சில வேளைகளில் ஓர் கூட்டம் கொண்டிருக்கும் உணர்ச்சிப் பிளம்பு, செய்ய சாத்தியமற்ற கடின செயற்பாடுகளைக் கூட செய்து முடிக்க வைத்துவிடும்.
ஓர் தலைவர்க்கு இவ்வனைத்து தொப்பிகளும் சந்தர்ப்பத்திற்கேற்றால் போல் அணிய வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் தவறான தொப்பியை தவறான சந்தர்ப்பத்தில் அணிந்தால் அது தலைமையின் ஆற்றலையே பாதித்துவிடும்.
ஓர் பிரச்சினைக்கு எப்படி வேறு பட்ட தொப்பிகள் செயலாற்றும் என்பதை உதாரணம் மூலம் காட்டுகிறேன்.
பிரச்சினை பல்கலைக்கழகம் மாணவர் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக கூறி பல்கலைக்கழகத்தை மூடியது.
தீர்வுகள்
01.நீலம்
மாணவர்களின் கல்விக்காக என்ன செய்யலாம்
பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் எப்படி விரைவாக அரையாண்டுகளை முடிப்பது
காலதாமதமாக பட்டங்கள் வழங்கப்படின் மாணவர்களின் வேலைக்காக வாழ்வாதாரம் என்ன ?
வேறு பல்கலைக்கழக மாணவர்களின் ஆலோசனை எவ்வாறு பெறுவது ?
02.வெள்ளை
எப்போது பல்கலைக்கழகம் மூடப்பட்டது.?
இதனால் பாதிப்படைந்த மாணவர் எண்ணிக்கை எவ்வளவு ?
வேறு பல்கலைக்கழகங்கள் எவ்வாறு அரையாண்டினை முடிக்கின்றன ?
03.பச்சை
இதற்கான பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்கலாமா ?
அடிப்படை உரிமை வழக்கொன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாமா ?
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முறையிடலாமா ?
பல்கலைக்கழகம் மீள ஆரம்பிக்கப்படும் வரை காத்திருக்கலாமா ?
04.மஞ்சள்
விடுமுறையில் ஆக்க பூர்வமாக தொழில் சார் கற்கை நெறியொன்றினை கற்கலாமா ?
பல இடங்கட்கு விஜயங்களை மேற்கொள்ளலாமா ?
நண்பர் குழுக்களாக இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடலாமா ?
05.கறுப்பு
பட்டம் பெற எவ்வளவு காலம் தாமதமாகும்?
பல்கலைக்கழக நிர்வாகத்தோடு முரண்படின் அது பட்டங்களை பாதிக்கும், புள்ளிகள் குறைவடைய வாய்ப்புண்டு.
கலவரங்கள் ஏற்படின் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி ஏற்படலாம்
06.சிவப்பு
பல்கலைக்கழக உறுப்பினர்களின் செயற்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்தல்.
பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்.
பல்கலைக்கழக பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் ஒழுக்காற்று அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தல்
பல்கலைக்கழகத்திலிருந்து விலகி வேறு கல்வி நிறுவனங்களில் கல்வியை தொடர முடிவெடுத்தல்.
எனவே ஒவ்வோர் மறுவிளைவும் சந்தர்ப்பத்திற்கேற்ற வகையில் பயன்படுத்த பட வேண்டும் என வேண்டி நிற்பதோடு தலைமைத்துவம் வளர்ச்சியை நோக்கி செல்லுகின்ற ஆளுமையின் ஓர் அங்கம் என்பது எனது நிலைப்பாடு.

அ.அர்ஜின்
சட்ட பீடம்
யாழ்பல்கலைக்கழகம்.
சட்ட பீடம்
யாழ்பல்கலைக்கழகம்.
0 comments:
Post a Comment