இளமாணி , முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை இந்தியாவில் தொடர்வதற்கான புலமைப்பரிசிலிற்கு
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன . கலாசார உறவுகளுக்காக இந்தியப் பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 180 புலமைப்பரிசில்கள் இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ளது .
மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் மாணவர்கள் கல்வியை தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன . நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தில் இளமாணிக் கற்கைகளான பொறியியல் , விஞ்ஞானம் , வணிகம் , பொருளியல் , மனிதப் பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 100 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன .
அத்துடன் மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டத்தில் முதுமாணி கற்கைகளான பொறியியல் , விஞ்ஞானம் , வர்த்தகம் , பொருளியல் , மனித பண்பியல் மற்றும் கலைகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 50 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன .
மேலும் இத்திட்டத்தில் பொறியியல் , விஞ்ஞானம் , மற்றும் விவசாய கற்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
ரஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தில் தொழில்நுட்ப துறையில் பொறியியல் இளமாணி மற்றும் தொழில்நுட்ப இளமாணி பட்டம் ஆகிய இளமாணி பட்டங்களுக்கு 25 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன . பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதுமாணி மற்றும் கலாநிதி ஆய்வுக்கு 5 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன .
இந்திய அரசு இந்தப் புலமைப்பரிசில்களுக்காக இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் பயனாளிகளைத் தெரிவு செய்யவுள்ளது . மிக உயர்ந்த திறமை கொண்ட நபர்களும் , பல்கலைக்கழகங்களில் ஆய்வு உள்ளிட்ட உயர் கல்வி கற்பதற்காக இலங்கை உயர் கல்வி அமைச்சினுடைய ஆலோசனைகளின் படி புலமைப்பரிசில் பெறும் நபர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் .
எல்லாப் புலமைப் பரிசில்களும் கல்விக் காலம் முழுமைக்குமான கல்விக் கட்டணத்துடன் செலவுப் படிகளை உள்ளடக்கியுள்ளது . அத்துடன் , தங்குமிடக் கொடுப்பனவுடன் புத்தகம் மற்றும் காகிதாதிக்கான ஒரு வருடக் கொடுப்பனவும் வழங்கப்படும் .
இதற்காக இலங்கை உயர் கல்வி அமைச்சு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது . உயர் கல்வி அமைச்சின் இணையத்தளமான எனும் முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கி பூர்த்தி செய்து எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் .
0 comments:
Post a Comment