நடைபெற்று முடிந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சை முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப்
பணிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் பிரதான நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு நிலையங்களில் நடைபெற உள்ளது .
சிங்களம் , தமிழ் , பௌத்தநெறி , சைவநெறி , இஸ்லாம் , கத்தோலிக்கம் , கிறிஸ்தவம் , வரலாறு , விஞ்ஞானம் , கீழைத்தேய சங்கீதம் ஆகிய பாடங்களின் விடைத்தாள்களே முதலாம் கட்டமாக மதிப்பீடு செய்யப்பட உள்ளன . இப் பாடங்களுக்கான பிரதம பரீட்சகர்களை அறிவுறுத்தும் கூட்டம் கடந்த 22 , 23 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது .
இம்முறை தமிழ்மொழி மூலமான மதிப்பீட்டுப் பணிகள் கொழும்பு , யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , திருகோணமலை , மட்டக்களப்பு , கல்முனை , கண்டி , நுவரெலியா , ஹட்டன் , வவுனியா , குருணாகல் , அனுராதபுரம் ஆகிய பிரதான நகரங்களில் நடைபெறும் .
0 comments:
Post a Comment