உலகில் மிகப் பெரிய மிதக்கும் புத்தகசாலை எனக் கூறப்படும் லோகோஸ் ஹோப் என்ற கப்பல் நாளை முதல் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி வரை காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் புத்தச்சாலை 09 மாடிகளை கொண்டதுடன் 132 அடி நீளமானது.
இதுவரை 164 நாடுகளில் ஆயிரத்து 400 துறைமுகங்களில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது.
இந்த கப்பலில் 45 நாடுகளை சேர்ந்த 400 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொண்டர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டர் அமைப்பின் கீழ் இந்த கப்பம் செயற்பட்டு வருகிறது. மேற்படி கப்பலில் 5 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்றும் உள்ளது.
காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் இந்த கப்பலை பார்வையிட செல்வோரில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் 100 ரூபாவை கட்டணமாக அறவிடவும் லோகோஸ் ஹோப் கப்பலின் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கிழமை நாட்டிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரையும், சனிக்கிழமை காலை 10 முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் கப்பலை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவருடத்தை முன்னிட்டு ஜனவரி முதலாம் திகதி மட்டும் கப்பல் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment