08:34
0
இலங்கையை சேர்ந்த 180 மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள சில பிரதான பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான புலமைப் பரிசில்களை வழங்க உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகர், பொருளியல் விஞ்ஞானம், வணிகம், மனித வளம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. 

 பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு, கலாநிதி பட்டம் ஆகியவற்றை வழங்குவதற்காகவே இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment