02:26
0





 போல் தனது அண்ணணிடமிருந்து கிறிஸ்மஸ் பரிசாக ஒரு காரை பெற்றான். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல் நாள் மாலை போல் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். அப்போது தருவில் சென்ற ஒரு பையன் பளபளத்த, போலின் புதுக்காரை சுற்றிச் சுற்றி வந்தான். வியந்து பார்த்தான். இது உங்களோடதா சார் ? என்று கேட்டான்.


போல் தலையசைத்தான் . “கிறிஸ்மஸ் பரிசா இதை எனக்கு என்னுடைய சகோதரன் கொடுத்திருக்கிறான்.” அந்தப்பையன் மலைத்துப் போனான். “அப்படியா …. உங்க சகோதரர் உங்களுக்கு இந்த காரை கொடுத்திட்டு பணமே வாங்கிக்கல ? எனக்கும் ஆசையாயிருக்கு…” என்று அந்தப் பையன் தயங்கினான்.

ஆனால், அவன் எதற்கு ஆசைப்படுகிறான் என்று போல் புரிந்து கொண்டான். தனக்கும் அந்த மாதிரி ஓர் சகோதரன் வேண்டும் என  அந்தப்பையன் நினைக்கிறான் என்று கருதினான் போல். ஆனால், அவனது எண்ணத்தை தகர்த்து விட்டான் அச்சிறுவன்.
“எனக்கும் ஆசையாயிருக்கு…“ அந்தப்பையன் தொடர்ந்து சொன்னது –“ உங்க சகோதரனைப்போல இருக்கணும்னு.”

போல் அந்த சிறுவனை ஆச்சரியத்தோடு பார்த்தான். பின்னர் சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில், “என்னோட காரில் நீ ஒரு சவாரி வர்றியா ?” என்று கேட்டான்.

“ஓ நிச்சயமாக… அது எனக்கு ரொம்ப பிடிக்கும்”

சிறு சவாரிக்குப் பின் அந்தப் பையன் போலிடம் திரும்பி கண்கள் ஜொலிக்க கேட்டான், “ சார்… நீங்க காரை என் வீட்டு முன்னால நிறுத்த முடியுமா ?”

போல் சின்னதானப் புன்னகைத்தான். பையன் எதற்காக அப்படிச் சொல்கிறான் என்று தனக்குத் தெரியும் என போல் நினைத்தான். அந்தப் பையன் எதற்காக அப்படிச் சொல்கிறான் என்று தனக்குத் தெரியும் என போல் நினைத்தான். அந்தப் பையன் தான் காரில் வந்து இறங்குவதைக் அக்கம்பக்கத்தினர் வியப்போடு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறான் போலும். ஆனால் இம்முறையும் போலின் யோசனை தப்பு ! “அங்கே இருக்கிற இரண்டு படிகளுக்கு பக்கத்தில நிறுத்த முடியமா சார் ? என்று அவன் கேட்டான்.

கார் நின்றதும் அவன் படிகளில் ஏறி ஓடினான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வரும் ஓசை கேட்டது, ஆனால் அவன் இப்போது மெதுவாக வந்தான். அவன் தனது ஊனமுற்ற தம்பியை இரு கைகளிலும் துாக்கி வந்தான். அவனை கீழ் படியில் கவனமாக உட்கார்த்தினான். பின்னர் அவனை லேசாக அழுத்தி, காரை சுட்டிக்காட்டி சொன்னான்.

”“நான் உங்கிட்ட சொன்னேன்ல, அதோ அந்த காரு! அவரோட அண்ணா அவருக்கு அந்த காரை கிறிஸ்மஸ்  பரிசாக கொடுத்திருக்கிறார். ஒரு நாள் நானும் உனக்கு இது மாதிரி ஒரு காரை கிறிஸ்மஸ் பரிசாக கொடுப்பேன். அப்புறம் கிறிஸ்துமஸின் போது ஊரெல்லாம் எப்படி அழகா இருக்கும்னு நான் உனக்கு சொல்றேன்ல, அதை நீ நேரடியாகவே பார்த்து ரசிக்கலாம்.

போல் தனது காரை விட்டு கீழிறங்கி, அந்த ஊனமுற்ற குட்டிப்பையனை துாக்கி வந்து காரில் முன் சீட்டில் அமர்த்தினான். அவனது அண்ணண் கண்கள் பிரகாசிக்க காரில் ஏறி தம்பியருகே அமர்ந்த கொண்டான். மூவரும் ஒரு மறக்க முடியாத சவாரி சென்றனர்.

அந்த கிறிஸ்மஸ் மாலையில் இயேசு கிறிஸ்து சொன்னதன் முழு அர்த்தத்தை போல் புரிந்து கொண்டான், கொடுப்பது என்பது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது.

உள்ளத்திற்கு ஒரு கோப்பை சிக்கன் சூப் கதைகள்

0 comments:

Post a Comment