10:16
0

சர்வதேச நாடுகள் தங்களின் ராணுவத்திற்கு செலவிடுவதை தவிர்த்து விட்டு, அந்த நிதியை கொண்டு குழந்தைகளின் கல்விக்கு செலவிட முன்வர வேண்டும் என உலக நாடுகளுக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் இன்று தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகளின் கல்வி உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட மலாலா யூசஃப்சாய் இவ்வாறு பேசியுள்ளார்.

மலாலா தொண்டு நிறுவனமான Malala Fund நிர்வாகிகள் எடுத்த ஆய்வில், சர்வதேச குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக ஆண்டுக்கு சுமார் 39 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

அதேபோல், சர்வதேச அளவில் ராணுவத்திற்காக 8 நாட்களில் செலவிடப்படும் தொகையும் 39 பில்லியன் டொலர்கள் தான். இந்த தொகையை ராணுவத்திற்கு செலவிடுவதற்கு பதிலாக குழந்தைகளின் 12 வருட கல்விக்கு செலவிடலாம் என மலாலா கூறியுள்ளார்.

39 பில்லியன் தொகை என்பது பெரிய நிதியாக இருந்தாலும், உலக அளவில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு இது உண்மையில் போதுமான நிதி அல்ல என அவர் பேசியுள்ளார்.


குழந்தைகள் இலவசமாக கல்வி கற்பதற்கு தேவையான நிதி ஏற்கனவே ஒவ்வொரு நாடுகளிடமும் இருக்கிறது எனக்கூறிய அவர், அந்த நிதியை குழந்தைகளின் கல்விக்காக செலவிட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நோபல் பரிசினை பெறுவதற்கு நோர்வே வந்ததையடுத்து இன்று இரண்டாவது முறையாக மலாலா நோர்வேக்கு வருகை தந்துள்ளார்.

முன்னதாக உலக வங்கியின் தலைவரான Jim Yong Kim என்பவரை சந்தித்து பேசிய மலாலா, அடுத்தாண்டு வெளியாகி உள்ள ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஆலோனை நடத்தியுள்ளார்.

மேலும், இவ்வளர்ச்சி பணிகள் தொடர்பான சிறப்பு கூட்டங்கள் Addis Ababa மற்றும் Ethiopia நாடுகளில் அடுத்த வாரங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment