எரிமலைகள் நிறைந்த சமோவா தீவிலுள்ள நீச்சல் தடாகமானது உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகமாக கருதப்படுகிறது.
சமோவாவின் உபொலு தீவின் தென் கடற்கரையிலுள்ள லொதோபகா கிராமத்தில் அமைந்துள்ள இந்த ரு சுவா சமுத்திர அகழி நீச்சல் தடாகம் 'பெரிய துவாரம்' என அழைக்கப்படுகிறது.
அந்தத் தீவுப் பிராந்தியத்திலுள்ள எரிமலையொன்று குமுறியதில் நில மேற்பரப்பு புதைந்து உருவான 98 அடி ஆழமான குழியே இவ்வாறு நீச்சல் தடாகமாக மாறியுள்ளது.
இந்த நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு வயதுவந்தவர்களுக்கு 10 ஸ்ரேலிங் பவுணும் சிறுவர்களுக்கு 6 ஸ்ரேலிங் பவுணும் கட்டணமாக அறவிடப்படுகிறது. ஆனால் 7 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு இந்த நீச்சல் தடாகத்தைப் பயன்படுத்த எதுவித கட்டணமும் அறவிடப்படுவதில்லை.
0 comments:
Post a Comment