18:03
0



செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் முழு மூச்சில் செயற்பட்டுவரும் நாசா விண்வெளி ஆய்வு மையம் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் மூலம் 360 டிகிரியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியானது, செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்க விரும்புபவர்களுக்கு அங்கிருப்பது போன்ற அனுபவத்தினை வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த வீடியோவின் மூலம் பூரண அனுபவத்தினை பெறுவதற்கு Chrome, Opera, Firefox, அல்லது Internet Explorer இணைய உலாவிகளில் இந்த வீடியோவை கண்டுகளிக்க வேண்டியிருப்பதுடன், HD தரத்தில் பார்வையிட வேண்டும்.

இதேவேளை 96 மைல்கள் தூரத்தை உள்ளடக்கி வீடியோ பதிவு செய்துள்ள அனுப்பியுள்ள ரோவர் விண்கலம் தற்போது விஞ்ஞானிகளால் Namib Dune என அழைக்கப்படும் 13 தொடக்கம் 17 மீற்றர் வரை உயரமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment