18:19
0

தொழில்நுட்பத்தில் நாள்தோறும் ஏதாவது ஒரு புரட்சி ஏற்படுத்துப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக மிகவும் மெல்லிய இலத்திரனியல் கடத்தி (வயர்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தியானது 3 அணுக்களின் தடிப்பினைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இக் கடத்தியினை வடிவமைத்துள்ளனர்.

செப்பு மற்றும் கந்தகம் போன்ற மூலகங்களை அடிப்படையாகக் கொண்டே குறித்த இலத்திரனியல் கடத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான Hao Yan “இக் கடத்தியினை 30 நிமிடங்களில் உருவாக்கிக்கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நனோ வயர்கள் எனப்படும் மிக மெல்லிய கடத்தியினை உருவாக்கும் முயற்சி இதற்கு முன்னர் இருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனினும் இம் முயற்சி பூரணமடைவதற்கு முன்னரே தற்போது 3 அணுக்களின் தடிப்பினைக் கொண்ட இக் கடத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment