ஒன்லைன் ஊடாக பல உலக நாடுகளுக்கு பொருட்களை டெலிவரி செய்துவரும் பிரபலமான நிறுவனமாக அமேஷான் திகழ்கின்றது.
ஒவ்வொரு வருடமும் நத்தார் தினத்தினை அண்மித்த விடுமுறை தினங்களிலும் வழமைக்கு மாறாக அதிக விற்பனை இத் தளத்தின் ஊடாக இடம்பெறும்.
ஆனால் இவ்வருடம் வழமையாக நத்தார் விடுமுறை தினங்களில் இடம்பெறும் வியாபாரத்தினை போன்று பல மடங்கு இடம்பெற்றுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி இவ் வருடம் நத்தார் விடுமுறை காலத்தில் ஒரு பில்லியனிற்கும் அதிகமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்களுள் அதிக அளவில் Echo Dot, Fire TV Stick, Fire Tablet, மற்றும் Amazon Echo போன்ற சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கலிபோர்னியாவின் Redondo கடற்கரைப் பகுதியில் வசதித்து வரும் ப்ரைம் மெம்பர் ஒருவருக்கு 13 நிமிடங்களில் டோர் டெலிவரி செய்து அசத்தியுள்ளது அமேஷான்.
இதுவரை இல்லாத அளவிற்கு மிக வேகமாக இடம்பெற்ற டெலிவரி சேவை இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment