22:48
0

பூமியில் உள்ள அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு குறைந்தபட்சம் 80 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகமாக அழிந்துப் போன வௌவால் உயிரினத்தை வைத்து, அமெரிக்காவில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தினார்கள்.

இந்த ஆய்வில், வௌவால் உயிரினம் அழிவதற்கு ஆக்கப்பூர்வமான காரணம் குறித்த முழுமையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு முக்கிய காரணம் மனிதர்களின் குடியேற்றம் என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின் முடிவில், அழிந்து போன பாலூட்டி இனத்தை சேர்ந்த வௌவால் உயிரினத்தை மீண்டும் உருவாக்க கிட்டத்தட்ட 80 லட்சம் ஆண்டுகள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

பூமியில் பல உயிரினங்களின் அழிவுக்கு மனிதர்களின் குடியேற்றமே காரணம் என்பது ஏற்கெனவே நடைபெற்ற பல ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment