சீனாவினை தளமாகக் கொண்டு செயற்படும் Faraday நிறுவமானது Faraday Future FF91 புதிய கார் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கார் அறிமுகமாக முன்னரே சுமார் 64,000 வரையானவர்கள் முற்பதிவு செய்துள்ளார்கள்.
எனினும் இக் காரின் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகாமலேயே இருந்தது.
ஆனால் சுமார் 2,00,000 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என அனுமானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் ஒன்றின்படி இக் காரின் விலை 2,90,000 அமெரிக்க டொலர்கள் என தெரிகின்றது.
இது எதிர்பார்க்கப்பட்ட விலையிலும் 90,000 அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.
இந்த தகவல் குறித்த காருக்கு முற்பதி செய்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதேவேளை Faraday நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Jia Yueting என்பவர் இக் காரின் விலை 2 மில்லியன் சைனிஸ் யுவான்களுக்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதாவது 290,000 அமெரிக்க டொலர்களிலும் குறைவு என குறிப்பிட்டுள்ளார்.
இக்காரானது 2018ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment