20:44
0

அமெரிக்காவில் உருவாகிவரும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட கட்டிடம் இதுவரை இல்லாத அளவுக்கு பல சிறப்புகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது.

மின்சக்தியின் தேவை அதிகரிப்பால் ஆப்பிள் மரபுசாரா ஆற்றல் மூலங்களை வைத்து தனது நிறுவனத்தை கலிபோர்னியாவில் அமைத்து வருகிறது.

தலைமையகமாக உருவாகி வரும் இதன் இரண்டாம் கேம்பஸ் ஸ்பேஸ்ஷிப் என அழைக்கப்படுகிறது.

காரணம், சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த பீஜிங் பறவைக்கூடு மைதானம் போலவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு விடயமாகும்.

2.8 மில்லியன் சதுர அடியில், சுமார் 5 பில்லியன் செலவில் தயாராகிவரும் இந்த கட்டிடம் கடந்த 2011ல் தொடங்கப்பட்டது.

இந்த வருடம் மே மாதம் அனைத்து வேலைகளும் முடிந்து விடும் என தெரிகிறது.

14,200 ஊழியர்கள் பணியுரியவுள்ள இந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிதான் உலகின் மிகப்பெரிய வளைந்த கண்ணாடி ஆகும்.

இந்த வளாகத்தில் மொத்தம் 8 கட்டிடங்கள் அமையவுள்ளன. 80 சதவீத அளவு மரங்கள் நடப்பட்டு பச்சை பசேல் என கட்டிடம் காட்சியளிக்க போகிறது.


0 comments:

Post a Comment