20:50
0

சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியாக ஒபேரா விளங்கியது.

இவ் உலாவி டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பின்னர் ஏனைய உலாவிகளில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வேகம் காரணமாக இவ் உலாவியின் பயன்பாடு குறைவடையத்தொடங்கியது.

எனினும் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சியில் ஒபேரா நிறுவனம் இறங்கியுள்ளது.

இதற்காக அதிவேகமான இணைய உலாவலைத் தரக்கூடிய புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

டெக்ஸ்டாப் கணினிகளுக்காக 43வது பதிப்பாக வெளியாகியுள்ள இப் புதிய உலாவி குறைந்தளவு மின் பாவனை மற்றும் குறைந்தளவு முறைவழியாக்கியின் செயற்பாடு என்பவற்றில் இயங்கக்கூடியது.

த நியூயோர்க் டைம்ஸ் இணையத்தளத்தினை பழைய ஒபேரா உலாவியில் திறந்தபோது முழுமையாக திறப்பதற்கு 4.19 செக்கன்கள் எடுத்துள்ளன. ஆனால் புதிய பதிப்பினூடு 0.01 செக்கன்களில் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இப்புதிய உலாவியினை ஆரம்பிக்கும் வேகமும் 13 சதவீதத்தினால் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
 




0 comments:

Post a Comment