பூமியில் வாழ்ந்த இராட்சத விலங்கு என நம்பப்படுவதோடு அவற்றின் சுவட்டு சான்றுகளைக் கொண்டு வடிவம் கொடுக்கப்பட்டுள்ள டைனோசர்கள் இன்றும் மனிதர்களுக்கு சிம்ம சொற்பனமாகவே திகழ்கின்றன.
இவை தொடர்பான ஆராய்ச்சிகள் பல நாடுகளில் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
இந்நிலையில் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் மேற்கொண்ட ஆய்வின்போது சுமார் 70 மில்லியன் வருங்களுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் டைனோசர் முட்டையின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Guangdong மாகாணத்தின் Foshan எனும் பகுதியிலேயே குறித்த முட்டை படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப் படிமம் தரை மட்டத்திலிருந்து 8 மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுகின்றது.
இதனால் டைனோசர்கள் தமது முட்டைகள் பாதுகாப்பாகவும் மறைவாகவும் இருக்க இவ்வாறு ஆழமான பகுதியை தெரிவு செய்யும் இயல்பைக் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும் கண்டெடுக்கப்பட்ட படிமமானது 13 தொடக்கம் 14 சென்ரிமீற்றர்கள் வரை நீளமானதாகும்.
0 comments:
Post a Comment