21:06
0

பம்பரத்தை ஆணியோடு தரையில் நிற்க வைக்க முடியாது அல்லவா? ஆனால், அதே பம்பரம் ஆணியுடன் சுற்றுவது மட்டும் எப்படி? நீங்கள் யோசித்தது உண்டா?

பம்பரம் சுற்றுவதற்கு என்ன காரணம்?

உங்களுக்கு எதிர்த்திசையில் இருக்கும் பம்பரத்தின் பகுதி கீழ் நோக்கி இயங்குவதையும் உங்கள் பக்கத்துக்கு வரும் பம்பரத்தின் பகுதி மேல் நோக்கி இயங்குவதை நன்றாக கவனிக்க முடியும்.

சுழலும் பம்பரம் கிட்டத்தட்ட செங்கோணத்தில் இயங்குகிற மாதிரியான நிலை உருவாகும். செங்கோணத்தில் ஒரு பொருள் ஒரே திசையில் சுழலும் போது அது பக்கவாட்டில் விழுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அதுபோல ஒரு இயக்க நிலை பம்பரத்திலும் உருவாகிறது. அதனால் பம்பரம் சாய்வதில்லை. என்பது ஒரு காரணமாகும்.

மற்றொரு காரணம் என்ன?


பம்பரம் சுழலும் போது அதன் சுற்று வேகம் அதிகமாக இருக்கும். அதாவது நீங்கள் பம்பரக்கயிறு மூலம் கொடுத்த வேகத்தை விட பம்பரத்தின் விளிம்பில் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும்.

நீங்கள் கயிற்றில் கொடுக்கும் வேகத்தோடு, பம்பரம் தன்னுடைய இயக்க வேகத்திலிருந்தே கூடுதலாக வேகத்தையும் எடுத்துக் கொள்கிறது. எனவே அந்த இரண்டு வேகங்களும் சேர்ந்து பம்பரம் சுழல்கிறது.

பம்பரத்தில் இரண்டு வேகங்கள் எப்படி உருவாகின்றது?

நாம் ஒருமுறை பம்பரத்திற்கு கொடுக்கும் விசையிலிருந்து பலமுறை சுழல்வதற்கான விசையைப் பம்பரம் பெற்றுக் கொள்கிறது. அதனால் பம்பரம் தொடர்ந்து பலமுறை சுழல்கிறது.

வேகமாகச் சுழன்று கொண்டிருப்பதால், பம்பரத்தின் நிலையில் எந்த மாறுதலும் ஏற்படுவதில்லை.

எனவே அது தொடர்ந்து சுழல்கிறது. நாம் கொடுத்த வேகம் தான் பம்பரம் கீழே விழாமல் தொடர்ந்து சுழலக் காரணம் என்றால், அது எடுத்துக் கொண்ட வேகமும் ஒரு காரணமாகும்.

நியூட்டனின் முதல் விதி

நியூட்டனின் முதல் இயக்க விதிப்படி, பம்பரத்தின் சுழற்சி பொருந்துகிறது. பம்பரம் வேகமாகச் சுழலும் போது அது வெளிப்புற விசையால் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல், அது தன் இயக்க நிலையிலேயே தொடர்ந்து இருக்கிறது.

சுழலும் பம்பரம் சாய்வது ஏன்?

நாம் கயிற்றின் மூலமாகப் பம்பரத்துக்குக் கொடுத்த விசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதால், பம்பரம் தன் இயக்கத்துக்கு எடுத்துக் கொள்ளும் விசையும் குறைகிறது. இதனால் பம்பரம் சாய்ந்து கீழே விழுகிறது.

0 comments:

Post a Comment