08:02
0

ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.
உலகில் மக்கள்தொகை கூடிய நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. இந்நாட்டில் உள்ள சீனப் பெருஞ்சுவர், அந்த நாட்டின் இயலுமை மற்றும் தொன்மையை கூறுகிறது.
இந்நாடு 4,000 ஆண்டுகளாக, சியா வம்சம் (Xia) தொடக்கம் சிங் வம்சம் (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று.
சீனா வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது.

சீனா நாட்டின் எல்லைகள் எது?
சீனாவின் கிழக்கில் வட கொரியாவும், வடக்கில் மங்கோலியாவும், வடகிழக்கில் ரஷ்யா, வட மேற்கில் கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும், மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் அமைந்துள்ளது.
சீனா தெற்கில் மியன்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளையும், கடலுக்கு அப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளும் அமைந்துள்ளது.

சீனா நாட்டின் சிறப்புகள் என்ன?
உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது.
சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பாங்கான நிலமாகும். உலகின் மிகவும் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் சீனா உரிமைக்கோரும் திபெத் மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது.
இமய மலைத்தொடர், சீன-இந்திய எல்லையில் உள்ளது. இதுதவிர குன்லன், தியென் சான், தாங்குலா, சின்லின், பெரும் சிங் ஆன் லின், தைய்ஹான், சிலியென், ஹென்துவான் என்பவை சீனாவின் முக்கிய மலைகளாகும்.
சீனாவில் 1500க்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றது. இவற்றுள் யாங்சி ஆறு அசியாவில் மிக நீளமானதும், உலகில் மூன்றாவது நீளமான நதியுமாகும். மஞ்சள் ஆறுயும் ஒரு முக்கிய நதியாகும். யாங்சி, மஞ்சள், ஹெலுங், முத்து, லியௌ, ஹைய் என்ற நதிகள் சினாவின் கிழக்கு நோக்கிப் பாய்ந்து பசிப்பிக் சமுத்திரத்தில் கலக்கின்றன.
இந்தியாவில் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படும் 'யாலு சாங்பு நதி' இந்து சமுத்திரத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. அர்சிஸ் ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் சமுத்திரத்தில் கலக்கிறது.

சீனா சுற்றுலாத் துறையின் சிறப்புகள்?
advertisement

சுற்றுலாவுக்கு புகழ்பெறாத சீனா நாடு அந்த துறையில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு காரணம் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே.
சீனாவில் மார்ச், ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர் போன்ற மாதங்கள் சுற்றுலாவிற்கு சிறந்த மாதமாகும். இங்கு பகலை விட இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவாகக் காணப்படும்.

சீனா தேசிய மொழி எது? - Mandarin Chinese
சீனா அழைப்புக்குறி எண்? - 86
சீனா இணையக்குறி என்ன? - .cn
சீனா சுதந்திர தினம்? - 1949 October 1
சீனா நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 9.597 million km²

சீனா தேசியக் கொடி?

சீனா தேசிய நினைவுச் சின்னம்?

சீனா மக்கள் தொகை எவ்வளவு? - 1.371 billion

சீனா பிரபலமான உணவு எது? - Peking duck

சீனா தேசியப் பறவை எது? - crane

சீனா தேசிய விலங்கு எது? - Giant Panda

சீனா தேசிய மலர் எது? - peony

சீனா தேசிய மரம் எது? - Ginkgo

சீனா தேசிய பழம் என்ன? - kiwifruit

சீனா தேசிய விளையாட்டு என்ன? - table tennis

சீனா நாட்டின் நாணயம்? - ரென்மின்பி (yuan)

சீனா தலைநகரம் என்ன? - Beijing

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

0 comments:

Post a comment